Thursday, October 1, 2009

யோகமும் தவமும்

தவம்
தவம் என்றால் மனதை அடக்குதல். மன ஆற்றலை அதிகப்படுத்துதல் என்பது அல்ல. தவம் என்றல் இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உயிரற்ற பொருட்களும் உருவாக காரணமான மூல ஆற்றலை பற்றி விழிப்புணர்வு பெறுதலும் அவ்வாற்றலை வாழ்வில் பயன் படுதலுமே தவம் ஆகும் . அந்த ஆற்றல் எங்கும் நிறைந்தே இருக்கிறது. நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் நிறைந்தே இருக்கிறது. அதற்க்கு மனதை கடந்து செல்ல வேண்டும் . அதை உணர்வதற்கு நாம் நுண்ணிய மனோ நிலைக்குச சென்று, பின் மனமே illaa நிலைக்கு அதாவது அப்பால் இருக்கும் பொருளை இப்பால் கட்டும் தூய கண்ணாடி போலே மனோநிலைக்கு செல்ல வேண்டும் . கண், காது , மூக்கு , நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து புலங்களில் ஒரு புலனின் செயல்பாட்டை குறைத்தால் மற்ற புலன்களின் ஆற்றல் அதிகமாகும் உதாரணத்திற்கு கண் பார்வை அற்றவர்களுக்கு கேட்க்கும் திறன் அதிகமாயிருப்பதைக்காணலாம் . தவம் செய்யும் பொழுது நாம் ஐந்து புலன்களின் சலனங்களை குறைத்து நுண்ணிய மனோநிலைக்கு செல்கிறோம். பின் மனமற்ற நிலைக்கு செல்லுகிறோம். (இதை வேதங்களில் மனோநாசம் என்றும் சொல்லுவார்கள்.) அப்பொழுது உள்ளுணர்வு விழிப்படைகிறது . அங்கு நம்மிலும் நம்மைசுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கும் மூல ஆற்றலை உணர்கிறோம். எல்லாவற்றிற்கும் மூலமானது அந்த ஒரே ஆற்றல் என உணர்கிறோம். நாமும் அவ்வாற்rale என உணர்கிறோம்.

தவத்தை கண்டிப்பாக ஒரு குருவின் உதவியுடனே கற்க வேண்டும். அவ்வாறன்றி தன்னிச்சையாகவோ நூல்களில் படித்தோ செய்யக்கூடாது . காரணம் நீங்கள் எதையாவது தவறாக செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஒருசிலர் தவறாக செய்துவிட்டு, யோகம் தவம் செய்ததால் எனக்கு இவ்வாறு ஆகிவிட்டது என்று பலரிடம் சொல்லி யோகம் தவத்தின் உன்னதம் மக்களிடம் பரவுவதில் ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறார்கள். இவ்வாறு சிலர் தானும் kகட்டு பிறரையும் கெடுக்கும் நிலை ஏற்படுவதாலேயே குருவின்றி கற்றுக்கொள்ள கூடாது என்கின்றனர்.

யோகம்
யோகம் என்பது தவம் செய்ய ஏதுவான வகையில் உடலையும் உடலின் உள் அவயங்களையும் தயார் செய்யும் பயிற்சியே யோகம் ஆகும் . யோகத்தில் ஆசனம் , பிராணயாமம் முக்கியமானதாகும்.


aasanam
piranayamam


இதனை தொடர்ந்து www.vnthangamani.blogspot.com
என்ற தளத்தில் காணுங்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன் வி.என்.தங்கமணி


வாழ்க வளமுடன்
அன்பிர்ர்கினிய நண்பர்களே

வாழ்வின் அடிப்படை தேவைகள் நன்கு



  1. உடல் நலம்


  2. மனத்தூய்மை


  3. அறிவின் மேன்மை


  4. பொருள் வலம்

இந்த நான்கில் ஒன்றாகவும் நான்கிற்கும் அடிப்படையாகவும் இருப்பது அறிவின் மேன்மை ஆகும் . அறியாமையே அனைத்து துன்பத்திற்கும் காரணம். உடல் நலத்திற்கு முக்கிய காரணம் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி. இவை சரியான அளவில் பின்பற்றினால் உடல் நலம் பெரும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உள்ளத்தில் தூய்மையை ஏற்படுத்த முடியும். ( தொடரும் ப்ளீஸ் வெயிட் )

இதனை தொடர்ந்து www.vnthangamani.blogspot.com
என்ற தளத்தில் காணுங்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன் வி.என்.தங்கமணி